புதுடெல்லி மார்ச், 27
சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான புதிய தரவரிசையில் 43 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தர நிலையாக 60-வது இடத்தை தக்க வைத்துள்ளார். அண்மையில் லெபனானில் நடந்த ஃபீடர் சீரிஸ் போட்டியில் சத்யன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் காரணமாக தரவரிசை பட்டியலில் அவர் ஏற்றம் கண்டுள்ளார்.