நெல்லை மார்ச், 25
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பரப்புரை செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்தார். இந்நிலையில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நாங்குநேரியில் பரப்புரை துவங்குகிறார். இதற்காக அப்பகுதியில் பலத்த காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.