மும்பை மார்ச், 25
முன்னணி நடிகை சாய் பல்லவி திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நித்திஷ் கல்யாண் இயக்க உள்ள இராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய படத்தை இயக்கப் போவதாக சாய் பல்லவி அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.