கோவை மார்ச், 18
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பிரதமர் மோடி முதல்முறையாக இந்த தமிழகம் வருகிறார். கர்நாடகாவில் சிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5:30 மணிக்கு வரும் மோடி வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலணியில் தொடங்கும் வாகன பேரணி, ஆர் எஸ் புரம் காமராஜ் புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமரின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.