விருதுநகர் ஆக, 26
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அம்மா உணவகத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களை தரமாக வழங்க மேயர், பணியாளர்களுக்கு வலியுறுத்தினார்.
பின்னர் அருகில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று அங்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும், கடைகள் நடத்தும் வியாபாரிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளைக் குறித்து கேட்டறிந்தார்.