சென்னை பிப், 14
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த முறை உயர் பொறுப்பில் இருப்பதால் ஜாமின் வழங்கினால் சாட்சியும் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் இன்று அவருக்கு ஜாமீன் வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.