சென்னை பிப், 11
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என்மன் என் மக்கள்” பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து நட்டாவின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் மிண்ட் தங்க சாலையில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.