சென்னை பிப், 2
சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்ட்ரலில் ரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரம் எடுப்பதால் புதிய ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.