தென்னாப்பிரிக்கா ஜன, 25
இந்தியா-அயர்லாந்து இடையேயான U19 உலகக்கோப்பை போட்டி இன்று தென்னாபிரிக்காவில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. குரூப் ஏ பிரிவில் விளையாடும் இந்திய அணி முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வங்கதேசத்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளி பட்டியல் 2 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைக்குமா இந்தியா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.