சென்னை ஜன, 18
அதிமுக பொது குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். 2022 ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தொடர்ந்திருந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்திருந்தது.