புதுடெல்லி ஜன, 11
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பதவி விலகி இருப்பதை அடுத்து பி. எஸ் ராமன் அந்த பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய தலைமை வழக்கறிஞர் பதவி ஏற்றுக்கொள்ளவிருக்கிறார் ஏற்கனவே 2009 முதல் 2011 வரையிலான கருணாநிதியின் ஆட்சி காலத்தில் ராமன் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். அரசின் சிறப்பு வக்கீலாகவும் அவர் செயல்பட்டு இருக்கிறார்.