சென்னை ஜன, 5
மம்முட்டி ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் மம்மூட்டி முதல் முறையாக தன் பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளார். தன் பாலின உணர்வை அழுத்தமாக கூறியுள்ள இப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்ததுடன் பரவலாகவும் பேசப்பட்டது. உலக அளவில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக அதிக பாராட்டுகளை பெற்றது.