சென்னை ஜன, 10
ஆன்மீகமோ, காதலோ எதுவாக இருந்தாலும் அது கே
ஜே ஜேசுதாஸ் குரலில் இருந்து ஒலித்தால் அது கேட்கும் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடிவரும் அவர் இதுவரை எட்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார். பத்ம விபூஷன் விருதை வழங்கி மத்திய அரசு இவரை கௌரவத்துள்ளது. கர்நாடக இசை மீது தீவிர பற்று கொண்டவர். சபரிமலையில் இப்போதும் இவரது ஹரிவராசனம் பாடல் இல்லாமல் சுவாமி ஐயப்பனின் நடை மூடாது.