துபாய் டிச, 31
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அன்னாரின் இறப்பிற்காக இரங்கல் கூட்டம் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் நடத்தப்பட்டது.
இவ்விரங்கல் கூட்டம் அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர் காமராஜ், மகளிர் அணி செயலாளர் வகிதா பானு,தேமுதிக அமீரக பிரிவு துணைச் செயலாளர் அம்ஜத் அலி, துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், முன்னாள் துணைச் செயலாளர் தவசி முருகன், முன்னாள் துணைச் செயலாளர் சாகீன் செல்வராஜ். துணைச் செயலாளர் கார்த்திகேயன், அமீரகப்பிரிவு முன்னாள் செயலாளர் காரல் மார்க்ஸ். கேப்டன் மன்ற துணைச் செயலாளர் பஷீர் அஹமத். அரியலூர் மாவட்டம் பிரகாஷ். துணைச் செயலாளர்கள் கார்த்திகேயன், செல்வம் சேகர், முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இந்த இரங்கல் கூட்டத்திற்கு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களான, சமூகசேவகி டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ், தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் அமீரக நிருபர் நஜீம் மரிக்கா, விடுதலை சிறுத்தை செயலாளர் நிர்வாகிகள், E2B ராஜு மந்திரி, அமுமுக நிர்வாகிகள் செயலாளர் முருகேசன். சாதிக் அலி, மதிமுக துபாய் நிர்வாகி , துரை அண்ணண், எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, அமமுக நிர்வாகி சாதிக், டிக்டாக் ஷாநவாஸ், திமுக நிர்வாகிகள் எமிரேட்ஸ் அப்துல்லாஹ் கனி, நசீர் அஹமத், கள்ளக்குறிச்சி சின்னசாமி, திருநாவுகாரசு, கூத்தாநல்லூர் தாஹிர், எல்லா தமிழ் ராவூப், டிக்டாக் சரவணன் குடும்பத்தினர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க கேப்டன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.