புதுடெல்லி டிச, 25
12 முறை பாராளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் என்ற வரலாற்று சாதனைக்கு உரியவரான வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. 1980ல் பாஜகவை உருவாக்கி 1996 இல் ஆட்சியில் அமர்த்திய அரசியல் ஜாம்பவான், பொக்ரான் அணு ஆயுத சோதனை நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தவர் 24 கட்சிகளை அரவணைத்து ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தலாம் என்று நிரூபித்த அரசியல் சாணக்கியன். இன்றைய பாஜகவின் விஸ்வரூபத்திற்கு விதையிட்டவர் இந்த வாஜ்பாய்.