கேரளா டிச, 25
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ரஞ்சி கிரிக்கெட்டுக்கான கேரள அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகன் குன்னு மால் துணை கேப்டனாக செயல்படுவார். ரஞ்சி கிரிக்கெட்டில் கேரள அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆலப்புழாவில் வரும் ஜனவரி 5ம் தேதி நடக்க உள்ளது.