சென்னை டிச, 20
அறிமுக இயக்குனர் செல்வா அன்பரசன் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் பழனிச்சாமி வாத்தியார். இதில் கவுண்டமணி ஜோடியாக நடிகை சஞ்சனா சிங் நடிக்க, கௌரவ வேடத்தில் சிவ கார்த்திகேயனும் நடிக்க உள்ளார். மேலும் யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.