சென்னை டிச, 17
தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் தேமுதிக கட்சி எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எங்களுடைய லட்சியம். தேமுதிகவில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும் என்பது நிர்வாகிகள் விருப்பம் என தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு பொருளாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.