சென்னை டிச, 15
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டர், கார்த்திகேயன், பெருங்கரை பாலா ஆகியோர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். நீக்கப்பட்ட அனைவரும் நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 12 வருடம் சீமான் கூடவே பயணித்தவர்கள் அவர்களை நீக்க வேண்டிய காரணம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.