ராஜஸ்தான் டிச, 15
ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் ஷர்மா இன்று பதவி ஏற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினரான பஜன்லால் சர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே. பி நட்டா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.