சென்னை டிச, 12
சென்னையில் நாளை மறுநாள் டிசம்பர் 14ம் தேதி தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க உள்ளார். நீண்ட நாட்கள் கழித்து கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் சந்திக்கும் அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளார். மேலும் பிரேமலதாவுக்கு கூடுதல் பொறுப்பு, விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது