பிரிட்டன் டிச, 9
பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது வாழ்வாதாரத்திற்கு 18,600 பவுண்டாக இருந்த வருமான அளவை 38,700 பவுண்டாக உயர்த்தியுள்ளது. இதனால் குறைந்த வருவாய் ஈட்டும் நபர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்றப்பட்ட விதிகள் 2024 ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.