பாகிஸ்தான் டிச, 10
இந்தியாவுடன் நல்லுறவு வைத்திருப்பது பாகிஸ்தான் நலனுக்கு முக்கியம் என்று அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 1999 கார்கிலீ போரை எதிர்த்ததால்தான் எனது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. அதற்காகத்தான் அப்போதிய ராணுவ தலைமை தளபதி எனது ஆட்சியை கலைத்தார். கார்கில் போர் கூடாது என்று நான் அப்போது கூறியது உண்மைதான் என்பது பின்னர் நிரூபனமானது என்றார்.