சென்னை டிச, 4
திமுகவில் 90% இந்துக்கள்தான் உள்ளனர் இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் பேசியவர் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி போல சில பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் தொடக்கம் முதல் இந்து சமய அறநிலையத்துறையை திமுக சிறப்பாக வழி நடத்தி வருகிறது. மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக தான் கொண்டு வந்தது என்றார்.