சென்னை டிச, 3
டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் 4,820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 500 கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.