திருவனந்தபுரம் நவ, 26
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.