ராஜஸ்தான் நவ, 25
ராஜஸ்தானில் 199 தொகுதிகளு க்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிசோரம், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று நடக்கும் தேர்தலுக்காக 51,756 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.