கேரளா நவ, 24
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையில் கூடுதலாக பாம்பு பிடி தொழிலாளர்கள் பணியமர்த்த உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை சென்ற ஆறு வயது சிறுமியை பாம்பு கடித்ததையடுத்து கேரளா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலை வழித்தடத்தில் ஏற்கனவே பாம்பு பிடி தொழிலாளர்கள் உள்ளனர். பழங்குடியினத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.