புதுச்சேரி நவ, 24
தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்க கடல் பகுதியில் நிலை கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.