சென்னை நவ, 20
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருமல், சளி தொல்லை காரணமாக நேற்று மாலை சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவும் விஜயகாந்த் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை முடிந்து நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.