சென்னை நவ, 18
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் தளபதி விஜய் நூலகம் திறக்கப்படவுள்ளது. காலை 10:30 மணி அளவில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். மேலும் இரண்டாம் கட்டமாக வரும் நவம்பர் 23ம் தேதி நெல்லை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 21 இடங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.