கீழக்கரை நவ, 18
ராமநாதபுரம் கீழக்கரையில் மறைந்த முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக பொது சுகாதாரமும் கீழக்கரை நகராட்சியும் இணைந்து மாபெரும் பொது மருத்துவ முகாமை நடத்தினர்.
இம்முகாமை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,ஆணையர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருப்புல்லாணி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ராசிக்தீன் தலைமையிலான மருத்துவ குழு மக்களுக்கான பல்வேறு மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவமும் மேற்கொண்டனர்.
கீழக்கரை அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவின் மருத்துவர் பாசிலா பானு,மருத்துவர் கௌரி, மகப்பேறு மருத்துவர் யுவஜனனி உள்ளிட்ட மருத்துவ குழு சிறப்பாக செயல்பட்டது.
முன்னதாக மருத்துவ முகாமை கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் பார்வையிட்டு சென்றார். உடன் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா இருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சக்கினா பேகம்,மூர் நவாஸ்,சித்தீக்,நசுருதீன்,மீரான் அலி,ஷேக் உசேன்,டெல்சி,காயத்திரி,கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவர் பொறியாளர் கபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை வரலாற்றில் இன்றைய பொது மருத்துவ முகாம் மிகவும் பிரம்மாண்டமாகவும் மக்களை கவரும் வகையிலும் இருந்தன. முன்னதாக வருகை தந்த அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஜஹாங்கீர் ஆரூஸி.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.