புதுடெல்லி நவ, 6
முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் பேறுகால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். குழந்தையின் 18 வயது வரை பணிக்காலத்தில் 360 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.