பெங்களூரு நவ, 6
பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வில் துறையின் உதவிஇயக்குனராக இருந்த பிரதிமா வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூடியதை இந்த கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.