மயிலாடுதுறை ஆகஸ்ட், 21
சீர்காழியில் கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத் தலைவர் சோலை ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஹபிபுல்லா, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஹென்றிஸ் வரவேற்றார். சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா முருகன் போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி கடந்த 19 ம்தேதி தொடங்கி இன்று வரை பகல், இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் சிறந்த 12 கபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம்பள்ளி, தாளாளர் ராதாகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பஞ்சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.