துபாய் நவ, 3
இந்தியாவில் இருந்து வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்துவருகிறார்கள். அப்படி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப துபாய், அபுதாபி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போது நெய், ஊறுகாய், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது என தகவல் வெளி வந்துள்ளது!
விமான பயணத்தின் போது தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்வது எதிர்பாராத அபாயங்களை உருவாக்கும் அதனால் தான் விமானத்தில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எப்போதுமே கட்டுப்பாடுகள் அதிகம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் அதிகாரிகளால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம், செக்-இன் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதால், செக்-இன் சாமான்கள் மறுக்கப்படுவதின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்னவென்று நாம் முதலில் தெரிந்துக் கொள்வது அவசியம்.
விமானத்தில் நீங்கள் எடுத்து செல்லக்கூடாதவை:
காய்ந்த தேங்காய், நெய், ஊறுகாய், பட்டாசுகள், எண்ணெய் உணவு பொருட்கள், பார்ட்டி பாப்பர்ஸ், பெயிண்ட், லைட்டர்ஸ், பவர் பேங்க், வாசனை திரவியங்கள், இ-சிகரெட்டுகள், கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வளைகுடா நாடுகளுக்கு பயணிக்கும் போது இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்களது பெட்டிகளை தயார் செய்யவும்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.