துபாய் நவ, 2
ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் சௌபா பகுதியில் உள்ள ஜெம்ஸ் வெள்ளிங்டம் இன்டர்நேஷனல் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டம் பல்வேறு ஆடல், பாடல், மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் தனித்திறமைகள், ஆடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு ஜெகநாதன் மற்றும் ரம்யா தொகுத்துவழங்க சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக தமிழ் நாட்டில் இருந்து நடிகை ஓவியா கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக டிவிஎஸ் ஹைதர் அலி, ரோமனா டாக்டர் மீனா, SRM மதன் உஷா, அல் சபா ரேடியோலஜி டாக்டர் ரூபா. TEPA பால் பிரபாகர், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், ஜிபி ப்ரோடக்சன் கோகுல் பிரசாத், A2B ராஜு, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, பாளையங்கோட்டை ரமேஷ், எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் டாக்டர் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.