சென்னை நவ, 2
மக்கள் நீதி மய்யம் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும், மக்கள் நீதி மய்ய இளைஞர் அணி இருக்கா இல்லையா என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் மௌலி ஜெயராமன் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மௌலி ஜெயராமன் அனைத்து பொறுப்புகளிலும் இருந்த நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைமை அறிவித்துள்ளது.