திருவண்ணாமலை நவ, 3
திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து தற்போது ஏ.வ. வேலு குறி வைக்கப்பட்டுள்ளார். இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.