மதுரை நவ, 1
காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் கூறுவதில் அரசியல் உள்ளது. தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய இனத்தின் உரிமையை காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் பலி கேட்கின்றன ” என்றார்.