ராமநாதபுரம் நவ, 1
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின் பெயரிலும், மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில்,
இன்று பாரதிநகரில் உள்ள தனியார் உணவகத்தில் மதியம் 2 மணிக்கு ஒன்றிய பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது என்றும், இந்த நேர்காணலில் ஒன்றிய நகர பேரு அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்புகளில் ஏற்கனவே பணியாற்றி இருந்தால் அது தொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞர் அணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.