புதுடெல்லி அக், 18
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சி பிரிவு மற்றும் கேஸட் ரேங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்கள் துணை ராணுவ படைகளில் பணிபுரிவருக்கு அதிகபட்சமாக ரூ. 7000 வரை தீபாவளிக்கு போனஸ் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.