பூனா அக், 18
பங்களாதேஷ்-இந்தியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 19ம் தேதி பூனே வில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பங்களாதேஷ் மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. டெங்குவிலிருந்து சுப்மன்கில் குணம் அடைந்துள்ளதால் அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. இரு அணிகளும் வெற்றியை நோக்கி செல்வதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.