புதுடெல்லி அக், 14
இன்று பிரபஞ்ச இசை தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாகரிகம் தோன்றியது முதல் இப்போது வரை இருக்கும் அனைத்து இசை வடிவங்களையும் கொண்டாடும் நோக்கில் இந்த தினம் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பும் இதை அங்கீகரித்து சிறப்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.