மத்திய பிரதேசம் அக், 13
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 679 தொகுதிகள் உள்ளன. இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சட்டப்பேரவை தொகுதிகளில் ஆறில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.