புதுடெல்லி செப், 28
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், பொறியியல் படித்தவர்கள் கூட ரயில் நிலையத்தில் கூலி வேலை பார்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லி ரயில் நிலைய கூலியாட்களை சந்தித்தது தொடர்பாக கருத்து கூறிய அவர், படிப்பறிவு பெற்ற குடிமகன் கூட இரண்டு வேளை சாப்பாட்டிற்கு சம்பாதிக்க போராட வேண்டிய சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.