வாரணாசி செப், 22
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்கிறார். 30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 450 கோடி செலவில் இந்த அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 30 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டிகளை காணமுடியும். சிவனின் கரு பொருளை கொண்டு அமையவிருக்கும் இந்த மைதானம் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அரங்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.