புதுடெல்லி செப், 4
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘இண்டியா’கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.