விருதுநகர் ஆக, 30
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதா ரர்களின் மனுவை உடனடி யாக பரிசீலனை செய்து 1 பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் டிராக்டர், லோடு வாகனம், கறவை மாடு வாங்குவதற்கும், பால் பண்ணை அமைப்பதற்கும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.32.70 லட்சம் மதிப்பிலான காசோ லைகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், மாவட்ட தாட்கோ மேலாளர் சுகுமாரன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.