சென்னை ஆக, 23
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாகவும் இப்படத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படமும் 2024 ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.